மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத மூத்த தலைவர்களின் போர்க்கொடியால் கர்நாடக பாஜகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டம் அடைந்துள்ளது. ஷிமோகா, சித்ரதுர்கா, பெங்களூரு வடக்கு, சிக்கமங்களூரு, மைசூரு, தாவணகரே தொகுதிகளில் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஷிமோகா தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மகனுக்கு எதிராக அதே கட்சியை சேர்ந்த ஈஸ்வரப்பா போட்டி வேட்பாளராக நிற்கிறார்.

ஒன்றிய அமைச்சராக இருந்த நாராயணசாமி, சித்ரதுர்கா தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். 6 தொகுதிகளிலும் உட்கட்சிப் பூசல் உச்சமானதால் பெங்களூரு பிரச்சாரத்துக்கு வந்த அமித் ஷா, நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal