மதுரையில் வானதி சீனிவாசனின் தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக வேட்பாளர் ராமசீனிவாசன் வராததால், டென்ஷன் ஆன அவர், வேட்பாளர் இல்லாமல் பிரசாரம் செய்தார். மதுரை தொகுதி பாஜக வேட்பாளர் ராமசீனிவாசனை ஆதரித்து கோவை எம்எல்ஏ வானதி சீனிவாசன் மதுரை விளக்குத்தூண் பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள பாஜக வேட்பாளர் ராமசீனிவாசன் இதோ வருகிறார்; அதோ வருகிறார் என தெரிவித்ததால், வானதி சீனிவாசன் அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். கடைசிவரை வேட்பாளர் வராததால், டென்ஷன் ஆன அவர், வேறு வழியின்றி வேட்பாளர் இல்லாமலேயே ஓட்டுக்கேட்க கிளம்பினார். காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளம் வரை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal