ஓ.பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். ஒரு பெண் ஆரத்தி எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவரது தட்டில் ரூ.2000 போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் ஓ. பன்னீர்செல்வம் ஆரத்தி காட்டிய பெண்ணுக்கு கொடுப்பதற்காக தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறார். அதில் 500 ரூபாய் நோட்டுகளாக வருகிறது. அதில் 4 நோட்டுகளை எடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கொடுக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஓ.பன்னீர் செல்வம் ரூ.2000 வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் எழுந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal