மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜகவினருடன் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal