தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் தேர்தலுக்காக பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 21 நாட்களே உள்ள நிலையில் தலைவர்கள் கட்சி, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.திமு.க. வேட்பாளர் சரவணனின் அறிமுகம் மற்றும் பிரசாரம் கூட்டம் செல்லூரில் நடைபெற்றது இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “நான் பேசும்போது யாராவது பாதியில் எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீங்க” என்று கூறியதால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

மேலும் செல்லூர் ராஜூ கூறியதாவது:- கூட்டத்தில் பேச்சை ஆரம்பிக்க போவதால் நீண்ட நேரம் அமர்ந்து உள்ளவர்கள் எழுந்து போவது என்றால் போகலாம். இங்க இருந்தா பேசக்கூடாது. இடையில் எழுந்திருக்க கூடாது. அப்படி இருக்கிறங்க உட்காருங்கள். அப்படி இல்லன்னா ரத்தம் கக்கி செத்துருவீங்க. நான் மந்திரம் போட்டு வந்துருக்க. நான் ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது யாராவது எழுந்திருச்சி போனா அவங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ரத்தம் கக்கி சாவாங்க…னு சொல்லிட்டு வந்துருக்கேன் என்று பேசினார். செல்லூர் ராஜூவின் பேச்சை கேட்டு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal