தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் இரண்டாவது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கி உள்ளார். இந்நிலையில் திருவல்லிக்கேணியில் இதுவரை ஏன் தொகுதி பக்கமே வரவில்லை என, தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சார வாகனத்தை மறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் களம் இறங்கி உள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன், திருவல்லிக்கேணி பகுதியில் பிரச்சாரத்திற்கு சென்றார்.. அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, தமிழச்சி தங்கப்பாண்டியனின் வாகனத்தை மறித்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத்தனை நாட்களாக தொகுதி பக்கமே வராமல் இப்போது வருவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்கள்..

திருவல்லிக்கேணி பாரதிதாசன் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சேதமடைந்து இருப்பதாகவும், இதுப்பற்றி நீண்ட நாட்களாக கூறியும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, பொதுமக்கள் சிலர், தமிழச்சி தங்கப்பாண்டியனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ‘‘அடுத்தவாட்டி வாங்க.. இந்த முறை போயிடுங்க.. உயிருடன் இருந்தால் வந்து பாருங்கள்.. போங்கய்யா நீங்களும் உங்கள எலெக்சனும் என்று ஆவேசமாக பேசினார்கள்.. மேலும் 1500 ஓட்டுன்னா சும்மாவா.. ஒரு ஓட்டில் ஜெயிக்குறாங்கல்ல.. அவங்க சுயநலத்திற்காக வருகிறார்கள்… இங்கு யார் செத்தால் என்ன.. பிழைத்தால் என்ன என்று இருக்கிறார்கள்.. ’’ என்று கேள்வி எழுப்பினார்கள்..

சேதமடைந்த திருவல்லிக்கேணி பாரதிதாசன் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal