திருச்சி பாராளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:”சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் பிற கட்சிகள் வஞ்சிக்கப்படுகின்றன. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் கரும்பு விவசாயி சின்னம் தரவில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் கூட அந்த சின்னத்துக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர்.
அதுபோலவே இப்போது எங்களுக்கும் பம்பரம் சின்னத்தில் பிரச்சனை செய்கிறது. நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் நம்புகிறோம். ஒருவேளை பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால் மாற்று திட்டங்களும் வைத்துள்ளோம். உதயசூரியன் சின்னத்தை மதித்தாலும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளேன். சின்னம் மறுக்கப்பட்டது குறித்து இன்று மதியம் நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம். புதிய சின்னம் கொடுத்தாலும் மக்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெறுவேன். பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டதால் எங்களுக்கு எந்த பின்னடைவும் தற்போது இல்லை” என்றார்.