தேனி மாவட்டம், கம்பத்தைச் சேர்ந்தவர் சாதிக் ராஜா. இவர் அமமுக கட்சியின் கம்பம் நகர துணைச் செயலாளராக உள்ளார். பாஜகவுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளதை கண்டித்து, அமமுக கட்சியில் இருந்து வெளியேறுகிறேன் என நேற்று முன்தினம் நகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினார். இதுதேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சாதிக் ராஜா தலைமையில் அமமுக மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த சுமார் 50 பேர் நேற்று மாலை தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். தேனி வேட்பாளராக டிடிவி.தினகரன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமமுகவினர் அடுத்தடுத்து மாற்று கட்சியில் இணைந்து வருவதால் தேனியில் கூடாரம் காலியாகி வருகிறது.