திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் பாளையம் பகுதியில் பறக்கும் படை அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரினை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரை பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (27) என்பவர் ஓட்டி வந்தார்.
காரினுள் உரிய ஆவணங்கள் இன்றி, 300 கைத்தறி துண்டுகள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் பிரசாந்திடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
பின்னர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 300 கைத்தறி துண்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை பறக்கும் படை குழுவினர், துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.