தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 2014ஆம் ஆண்டு 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டன. திமுக இன்றைய தினம் வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் அறிக்கையையும் வெளியிட உள்ளது.

இந்த நிலையில் வழக்கமான வேகத்தோடு அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

சென்னை வடக்கு – ராயபுரம் மனோ சென்னை தெற்கு – ஜெயவர்தன் காஞ்சிபுரம் – ராஜசேகர் அரக்கோணம் – விஜயன் கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ் தென் சென்னை- ஜெயவர்தன் சேலம் – விக்னேஷ் தேனி – நாராயணசாமி ஆரணி – கஜேந்திரன் விழுப்புரம் – பாக்யராஜ் சேலம்- விக்னேஷ் நாமக்கல் – கவிமணி ஈரோடு – ஆற்றல் அசோக்குமார் மதுரை – சரவணன் சிதம்பரம் – சந்திரஹாசன் ராமநாதபுரம் – ஜெயப்பெருமாள்

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ‘‘அதிமுக கூட்டணி தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறினார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. எனவே 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்’’ என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal