மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக விவசாயிகளை கவரும் வகையில் காங்கிரஸ் தனது 5 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நிரந்தர ஆணையம் அமைக்கப்படும்.

பயிர் பாதிப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி கொள்கை உருவாக்கப்படும். விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதிகள் அளித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal