அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவில், போதைப் பொருள் பறிமுதல், கைது தொடர்பான சமீப நிகழ்வுகளில் திமுகவை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.