‘காதலுக்கு கண் இல்லை’ என்பார்கள். ஆனால், ‘கள்ளக்காதலுக்கு’த்தான் ‘எதுவுமே’ இல்லாமல் போய்விட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா மாவட்டம், பங்கார் கிராமத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பிர்சு ராம் (33) என்பவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். பிர்சு ராமின் தம்பி பீம் சயாம்க்கு தனது அண்ணியின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
இதற்கு தனது அண்ணன் இடையூறாக இருப்பதாக நினைத்து பிர்சு ராம் குடிபோதையில் இருந்தபோது அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பீம் சயாமை போலீசார் கைது செய்தனர்.
அண்ணியின் மீது ஏற்பட்ட தீராத ஆசையால், அண்ணனை தம்பியே கொலை செய்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.