‘விடியல் தரப்போகிறோம் என்று திமுக எப்போது ஆட்சிக்கு வந்ததோ அன்று முதல் தமிழக மக்களின் நலம் போய்விட்டது’  என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் குற்றச்சாட்டு

இது தொடர்பாக டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 33 மாத திமுக ஆட்சியில் மக்கள் கடுமையாக வெறுப்பில் உள்ளனர். இதை மறைக்க மக்கள் நலமா என்ற திட்டத்தை ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார் ஏன்? மக்களிடம் நேரில்சென்று கேட்டால் நாங்கள் நலமாக இல்லை தாங்க முடியாத வேதனை தான் உள்ளோம் என்று கூறுவார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 100 தேர்தல் வாக்குறுதிகளையும், சட்டமன்ற தேர்தலில்  520 தேர்தல் வாக்குறுதிகளையும் ஸ்டாலின் கொடுத்தார். அந்த ஒவ்வொரு வாக்குறுதிகளையும் குறிப்பிட்டு மக்களிடம் நீங்கள் நலமா என்று கேட்டால் ஒட்டு மொத்தமக்களும் கூறுவார்கள் நீங்கள் என்றைக்கு ஆட்சிக்கு வந்தீர்களோ அன்று முதல் எங்கள் நலம் போய்விட்டது என்று கூறுவார்கள்.

தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்பபெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவோம் என்று கூறினீர்கள். எடப்பாடியார் கடுமையான கண்டன குரல் எழுப்பிய பிறகு, 27 மாதத்திற்கு பிறகு ஒரு கோடியே 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கிவிட்டு, மீதி உள்ளவர்களை தகுதி இல்லை என்று நிராகரித்து விட்டீர்கள் மீதமுள்ள ஒரு கோடியே 8 லட்சம் குடும்பங்கள் நீங்கள் நலமா என்று கேட்டால் எப்படி கூறுவார்கள்.

சொத்து வரிஉயர்வு ,மின்கட்டண உயர்வு, பால் உயர்வு, சமையல் பொருட்கள் விலை 40 சதவீதம் உயர்வு, இப்படி விலைவாசி எல்லாம் உயர்த்தி விட்டு மக்களை நீங்கள் நலமா என்று கூறினால் எப்படி நலம் என்று மக்கள் கூறுவார்கள். கேஸ்க்கு நூறு ரூபாய் மானியம் தருவேன் என்று கூறினீர்கள் இதுவரை நீங்கள் தரவில்லை

அதிமுக ஆட்சி காலத்தில் 12.50 லட்சம் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்பட்டது அதை நீங்கள் ரத்து செய்து விட்டீர்கள். இன்றைக்கு ஒரு பவுன் விலை 59,000 உள்ளது அதனால் இன்றைக்கு தங்கம் இல்லாமல் திருமணம் நடைபெறுகிறது அவரிடம் நீங்கள்  நலமா என்று கேட்டால் எப்படி பதில் கூறுவார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு 18000 உதவித்தொகை வழங்கப்படவில்லை, அதிமுக ஆட்சியில் 3 லட்சம் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது அதையும் நீங்கள் நிறுத்தி விட்டீர்கள், கிராமப்புற பெண்களுக்கு அதிமுக ஆட்சியில் விலையில்லா கறவை மாடுகள், செம்மறிஆடுகள், நாட்டுக்கோழி வழங்கப்பட்டன தாய்மார்களிடம் நீங்கள் நலமா என்று கூறினால் எப்படி நலம் என்று பதில் கூறுவார்கள்.

காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார்  ஆகியோர் 9,000  கோடியை ஒதுக்கி உள்ளார்கள் இது குறித்து நீங்கள் சிறு கண்டனத்தை கூட தெரிவித்து தெரிவித்தீர்களா? மேகதாது அணையை 69 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டும்பொழுது தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் வராமல் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

இது குறித்து சட்டமன்றத்தில் கண்டனதீர்மானம் நிறைவேற்றினீர்களா? எடப்பாடியார் ஆட்சியில் இருக்கும் பொழுது மேகதாது அணை கட்டுவோம் என்று கர்நாடகா அரசு கூறியது உண்டா? கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கூட நீங்கள் வழங்கவில்லை தொடர்ந்து விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள் உங்களுக்கு தைரியம் இருந்தால் விவசாயிகளிடம் நேரடியாக வந்து நீங்க நலமா என்று கேட்டுப் பாருங்கள் அவர்கள் நலம் என்று கூறுவார்களா?

கடந்த 25 ஆண்டுகளாக அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வாடுகிறார்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வோம் என்று கூறினீர்கள் ஆனால் இதுவரை நீங்கள் செய்தீர்களா? எடப்பாடியார் தொடர்ந்து குரல் கொடுத்து நான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் அப்போது அவர்களை விடுதலை செய்வேன் என்று மதுரையில் நடைபெற்ற எஸ்டிபி மாநாட்டில் கூறினார் இந்த இஸ்லாமிய மக்களிடத்தில் நீங்கள் நலமாய் என்று கேட்டால் ஸ்டாலின் நீங்கள் சீக்கிரம் வீட்டுக்கு போங்கள், எடப்பாடியார் ஆட்சிக்கு வரட்டும் அப்போதுதான் எங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று கூறுவார்கள். புரட்சித்தலைவி, எடப்பாடியார் ஆகியோர் படிக்கும் மாணவர்கள் கரங்களில் மடிக்கணினி வழங்கினார்கள் ஆனால் இன்றைக்கு அவர் கையில் கஞ்சா போதை இருக்கிறது இதுதான் நீங்கள் செய்த ஆட்சியில் லட்சணமா?

 அது மட்டும் அல்ல உலகத்திற்கு கலாச்சாரத்தை சொல்லிக் கொடுத்த தமிழகம் இன்றைக்கு உலகிற்கே போதை மருந்து கடத்துவதில் தமிழகத்தை தலைமை பீடமாக உருவாக்கி உள்ளீர்களே? தமிழகம் நலமாக இல்லை கோமா நிலையில் உள்ளது . இன்றைக்கு உதயநிதிக்கு பட்டாபிஷேகம் சூட்டி உள்ளீர்கள், விரைவில் துணை முதலமைச்சர் பதவி வாரி வழங்கி உள்ளீர்கள், ஒரே ஆண்டில் 30,000 ஆயிரம் கோடி ஊழல், மணல் ஊழல், சினிமாவை கட்டுக்குள் வைத்து பல்லாயிரம் கோடி என ஒட்டுமொத்தமாக ஸ்டாலின் குடும்பம் தான் நலமாக உள்ளது. தமிழக மக்கள் யாரும் நலமாக இல்லை’’ என காட்டமாக கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal