மார்ச் 8… இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ‘ஆணுக்கு பெண் சரிநிகர்’ என்ற பாரதியார் கனவும் நனவாகிவிட்டது.

இந்த நிலையில்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பதிவில்,

‘‘கருவறையில் மகளை பாதுகாத்திட இயலாத தாய்
பிறந்தது பொம்பளை என அங்கலாய்க்கும் மாமி
எதற்கு எங்களுக்கு பெண் சாமி!


தத்தி தத்தி நடைபழகும் பாட்டி- பேத்திக்கும் பாலியல் தொல்லை
வளரிளம் கண்மணிகள் வாழ்க்கை அறிவதற்குள்
இடுக்கண் வருங்கால் நகுக உணர்த்தும்
இல்வாழ்க்கை !


பணிபுரியும் பவளமல்லிகளுக்கு
பட்டை தீட்டிய வைரமாக மிளிர்ந்திட
வேலை வாழ்க்கை சமநிலை பயிற்சி பட்டறை ஆண்களுக்கு இல்லை !


தடைகற்களை உடைக்க உடைக்க
தலைமேல் விழுகிறது பெரும் பாறைகள்
எங்கள் பாலின சிறப்பு கொண்டாட்டங்கள் எதற்கு?


இரக்கம் காட்டும் ஆதரவு கரங்கள் அவசியமில்லை எங்களுக்கு
33% ஒதுக்கீடு மட்டுமே கையேந்த தயார்
சட்டங்கள் தீட்டும் மன்றங்களில் அமர்ந்திட
இருளும் ஒளியாக தெரியும்!


பாலினம் வேற்றுமைகள் விடைபெறும்
கொண்டாட்டங்கள் , விருதுகள் வேண்டாம்…
மனித இனம் என்ற ஒற்றை சொல்ல போதும் எங்களுக்கு!

அறத்துடன், பூங்கோதை ஆலடி அருணா..!’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal