‘எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண் உரிமை காக்கப்படும், பாதுகாக்கப்படும்’ என கழக மருத்துவரணி இணை செயலாளர் பா.டாக்டர் சரவணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசும் பேசிய டாக்டர் சரவணன், ‘‘உலக பெண்கள் தினம் மார்ச் 8 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது, அந்த பெண்கள் தினத்தை கொண்டாடக்கூடிய தகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தான் உள்ளது. ஏனென்றால் பெண் சமுதாயத்திற்காக எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கி, பாதுகாப்பு கவசமாக அம்மா அரசு இருந்தது.
இந்தியாவிலேயே ஏன் உலகத்திலே இல்லாத வகையில், பெண் சமுதாயத்திற்கு எண்ணற்ற திட்டங்களை புரட்சித்தலைவி அம்மாவும், அதனை தொடர்ந்து எடப்பாடியாரும் வாரி வழங்கினார்கள்புரட்சித்தலைவி அம்மா தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார் இதன் மூலம் மூலம் ,4500 மேற்பட்ட பெண் குழந்தைகளை பெண் சிசு கொலையில் இருந்து காப்பாற்றப்பட்டது இந்தத் திட்டத்தை அன்னை தெரசாவே பாராட்டினர்.
அதே போல் முதன் முதலில் மகளிர் காவல் நிலையங்கள் ,பெண் கமோண்டோ படைகள் உருவாக்கினார்.மகளிர் சுய உதவி குழுக்களை உருவாக்கித் தந்தார். தந்தைக்கு பதில் தாய்யின் இன்சியலையும் குழந்தைகளுக்கு சூட்டிக் கொள்ளலாம் என்று புரட்சிகரமாக அறிவித்து அதன் மூலம் ஆண்களுக்கு பெண்கள் சமம் என்று நிரூபித்து காட்டினார்.
ஒரு கோடியே 85 லட்சம் குடும்பங்களுக்கு தாய் வீட்டு சீதனமாக விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி திட்டம் வழங்கினார். தாலிக்கு தங்கம் திட்ட மூலம் 4 கிராம் தங்கம் படித்த பெண்களுக்கு 25000 நிதியுதவி, பட்டப் படிப்பு படித்த பெண்களுக்கு 50,000 நிதியுதவி வழங்கினார். இதன் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் பெண்களின் கல்வி விகிதாச்சாரம் உயர்ந்தது.
அதனைத் தொடர்ந்து 2016 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று கூறினார் அதனை தொடர்ந்து, அந்த திட்டத்தை எடப்பாடியார் தொடர்ந்து செயல்படுத்தினார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 12.51 லட்சம் ஏழைப் பெண்கள் தாலிக்கு தங்கம் திட்டம் மூலம் பயன்பெற்றனர்.
புரட்சித்தலைவி அம்மா 2016 ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தேதி உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில், இருசக்கர வாகன திட்டம் வழங்கப்படும் என்று கூறினார். அந்த திட்டத்தினை எடப்பாடியார் செயல்படுத்தி 2.85 லட்சம் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்தினை வழங்கினார்.
கிராமப்புறம் பொருளாதாரம் மேன்மை அடைய பெண்களுக்கு 12,000 கறவைபசுகள், 6 லட்சம் வெள்ளாடுகள், 2.4 லட்சம் நாட்டுக்கோழி வழங்கப்பட்ட இதன் மூலம் இனப்பெருக்கம் ஏற்பட்டு கிராமப்புற மக்களின் பொருளாதாரம் உயர்வு ஏற்பட்டது
கர்ப்பிணி பெண்களுக்கு 12,000 ரூ இருந்த உதவித்தொகையை 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 50 சகவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மா அரசாணை வெளியிட்டார் அதனை எடப்பாடியார் செயல்படுத்தினார். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு மிக்க நகரங்களாக சென்னை மற்றும் கோவை தேர்வு செய்யப்பட்டது.பெண் குழந்தை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் மூலம் தேசிய அளவில் தொடர் விருதுகள் பெறப்பட்டது.
2021 தேர்தலில் திமுக பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை சட்டமன்றத் தேர்தலில் அறிவித்தார்கள் எதையும் செய்யவில்லை .அனைத்து குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொல்லிவிட்டு 28 மாதங்களுக்கு பிறகு ஒரு கோடியே 15லட்சம் குடும்பங்களுக்கு வழங்கிவிட்டு மீதமுள்ள ஒரு கோடி 5 லட்சம் குடும்பங்களை தகுதி இல்லை என்று நிராகரித்து விட்டனர். அதேபோல கேஸ் மானியம் 100 ரூபாய் வழங்குவோம் என்று கூறினார்கள் அதையும் வழங்கவில்லை, குறிப்பாக தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துவிட்டனர் ,அதேபோல் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டத்தை ரத்து செய்துவிட்டனர்.
பெண்களுக்கு பேருந்து இலவசம் என்று கூறிவிட்டு குறைந்த பேருந்தை மட்டும் இயக்குகிறார்கள் அதனை தொடர்ந்து ,ஓசி என்று பெண்களை இழிவு படுத்தினார்கள். அதேபோல் திமுக நடத்திய மாநாட்டில் பெண் காவலர் மீது திமுகவினர் பாலியல் தொல்லை செய்தனர், இதற்கு மேலாக திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மகன் வீட்டில் பணிபுரிந்த பட்டியலில் இன சிறுமி மீது வன்கொடுமை தாக்குதல் செய்தனர் எடப்பாடியார் கடுமையான கண்டனத்தை தெரிவித்து பின்பு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விடியா திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழ்நாடு திகழ்கிறது. எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண் உரிமை காக்கப்படும், பாதுகாக்கப்படும்’’ என கூறினார்