மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச் மாதம் கையெழுத்தானது. மொத்த நிதி தேவையான ரூ.1,977.8 கோடியில் 82 சதவீத தொகையான ரூ.1,627.70 கோடியை ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள தொகையை இந்திய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக வேறெந்த கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருந்தது. கடந்த 2023 ஆகஸ்டுமாதம் 17-ந் தேதியன்று மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. 33 மாதங்களில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜனவரியில் அம்மாவின் அரசு அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் ஆட்சியின் பொழுது பாரத பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையில்தான் மதுரையில் ஒரு போஸ்டர் மையம் கொண்டுள்ளது. அந்த போஸ்டர்தான் தற்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.

அதாவது, எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க அன்றைய அமைச்சர், இன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர்உதயகுமார் அவர்களால் 225 ஏக்கர் இடம் மக்களிடமிருந்து பெற்று தரப்பட்டது.

கொரோனா இடைவெளிக்கு பிறகு ஆட்சி மாற்றம், 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்ற திமுக கூட்டணி குறிப்பாக மதுரையில் கம்யூனிஸ்ட் எம்.பி., திரு.வெங்கடேசன் போராடி ஒரு செங்கலை கூட நகட்டிராத நிலையில், திடீரென்று தற்போது தேர்தல் சமயத்தில் மட்டும் ‘லைம் லைட்’டிற்கு வந்திருக்கிறார்.

ஐந்து வருடம் கழித்து கட்டுமானப் பணி தொடங்கப்பட்டிருப்பது பா.ஜ.க’வின் தேர்தல் நேர யுக்தியாக இருந்தாலும் இயற்கை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளால் கட்டுமானப்பணி முடிந்து திறப்புவிழா காணும் பொழுது மறுபடியும் எடப்பாடியார் ஆட்சி அமைந்திருக்கும் என்று மதுரை மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் ஒரு செங்கல்லை வைத்து ஓட்டுக் கேட்ட உதயநிதி ஸ்டாலின், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதை வைத்து ஓட்டுக்கேட்பார் என்ற குரலும் எழாமல் இல்லை!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal