இன்னும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் இறங்கியிருக்கிறது.

பெரம்பலூர் நாடாளுடன்ற தொகுதி ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருக்கிறது. காரணம், தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் மகன், பா.ஜ.க. கூட்டணியில் தொழிலதிபர் ரவி பச்சமுத்து ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில்தான் பெரம்பலூர் மாவட்டம் பூலம்பாடியைச் சேர்ந்த பிரகதீஷ்குமார் பெரம்பலூர் தொகுதிக்கு காய்நகர்த்தி வருகிறார். இவர் மலேசியாவில் மிகப்பெரிய தொழில் அதிபராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட காய்நகர்த்தி வருகிறாராம்.

தொழிலதிபரை வேட்பாளராக அறிவித்தால், ‘விட்டமின்களை’ பாரிவேந்தருக்கு இணையாக வாரியிறைத்து, வெற்றி பெறுவார் என்று எடப்பாடியிடம் ‘மணி’யானவர் பேசியிருக்கிறாரம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal