திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் ஊராட்சி கள்ளிமேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி., வேலுமணி சியதாவது:-‘நலத்திட்டங்களை செயல்படுத்துவதை விட்டு, விட்டு , அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதில் தான் தி.மு.க.வினர் குறியாக உள்ளனர்.
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். ஜெயலலிதா செய்த நல்ல பல திட்டங்களும், எடப்பாடி பழனிச்சாமி வழங்கிய சிறப்பான ஆட்சியின் பலன்களை மக்கள் உணர்ந்து அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள்’. இவ்வாறு அவர் பேசினார்.