நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 2024 நாடாளுமன்ற தேர்தல் யார் வரவேண்டும் என்பதற்கான தேர்தல் இல்லை யார்வர கூடாது என்பதற்கான தேர்தல் ஆர்.மகேந்திரன் அதிரடியாக பேசியிருக்கிறார்.

திராவிட முன்னேற்ற கழக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 71-வது பிறந்தநாள் மற்றும் கழக அரசின் 2024ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நீலகிரி மாவட்டம் நெல்லியாளத்தில் நடைபெற்றது. திமுககழக தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் ஆர்.மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

‘‘2024 நாடாளுமன்ற தேர்தல் யார் வரவேண்டும் என்பதற்கான தேர்தல் இல்லை யார்வர கூடாது என்பதற்கான தேர்தல் பாஜகவின் தமிழக துரோகங்கள் பொய்பிரச்சாரங்கள் ஏமாற்று வேலைகள் என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் அதை பற்றி நான் பேசுகிறேன்.

பிரதமர் தற்போது வாரம்வாரம் தமிழகம் வருகிறார் இரண்டு மூன்று தமிழ் வார்த்தைகளை கற்று கொண்டு தமிழகத்திற்கு வந்து பேசினால் தமிழர்கள் ஓட்டு பேட்டு விடுவார்கள் என நினைக்கிறார் பாஜகவால் அதிமுக சிதறிகிடக்கிறது தமிழக நலனில் பாஜகவுக்கு அக்கறையே இல்லை ஓட்டுக்காக இப்போது ஜெயலலிதா புகழ்பாடுகின்றனர்

ஐ.டி மற்றும் ஈ.டி பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை செய்வது இல்லை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சிறப்பாக வேலை செய்வது போல் காட்டி மாற்று கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்த நினைகின்றனர். ஜி.எஸ்.டி. மூலம் நாம் மத்திய அரசுக்கு வழங்கும் வரி பணத்தில் 29 பைசா மட்டுமே தமிழகத்திற்கு வழங்க படுகிறது ஆனால் உத்திர பிரதேசம்,பீகார், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு 4ரூபாய் ,5ரூபாய், 6ரூபாய் வழங்குகின்றனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுகொடுக்காமல் போரடுவது திமுக மட்டுமே முதன் முதலாக மாநில கட்சி ஆட்சிக்கு வந்தது தமிழகத்தில்தான் அது திமுக ஆட்சி தமிழகத்தில் தான் செழிப்பான சிறப்பான ஆட்சி நடக்கிறது திமுகவின் இந்த மக்கள் ஆட்சிக்கு மக்கள் என்றும் துணையாக இருக்க வேண்டும்’’ என பேசினார்.

ஆக மொத்தத்தில் மலை மாவட்டமான நீலகியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதல் தி.மு.க. சார்பில் சபதம் எடுக்கப்பட்டிருக்கிறது.!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal