மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனை மதுரை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார்.

‘கண்டா வரச்சொல்லுங்க… ’ போஸ்டர் அருகில் மதுரை எம்.பி. சு.வெங்கடேன் இருப்பது போல் சமீபத்தில் வலைதளங்களில் புகைப்படம் வெளியாகியிருந்தது. இது தொடர்பாக அ.தி.மு.க. ஐ.டி.விங்கின் மாநிலச் செயலாளர் ராஜ் சத்தியன் வெளியிட்டுள்ள பதிவில்,

‘‘அடடே சு.வெங்கடேசன்மதுரை எம்.பி. நீங்களா.. யாரோ ஒருத்தர் போஸ்டரோட போட்டோல நிக்கிறாங்கன்னு நெனச்சிட்டேன், சாரிங்க அண்ணே.. மதுரை மக்களான நாங்க உங்களை பார்த்து 5 வருஷம் ஆச்சா.. அதான் ஞாபகமே இல்ல! ’’

‘‘நேத்து உங்க கூட்டணியான திமுகவுக்கு எதிரா, கொஞ்சம் பிஸியா வேற இருந்துட்டோம், லெட்டர் பேடுல மட்டுமே 5 வருஷத்தை ஓட்டிட்டு இப்போ என்னங்க வெளியில தலை காட்டுறீங்க? ஒஹோ கண்டாவரச்சொல்லுங்க ன்னு போஸ்டர் ஒட்டிட்டாங்களோ? நடுவுல சினிமாகாரங்களுக்கு டூர் கைமடாக வந்தீங்களே , அத சொல்ல வேண்டியதது தான அண்ணே…!’’

‘‘’மிகுந்த மனவருத்ததோடு சொல்கிறேன்… ஊரறிந்த இலக்கியவாதி நீங்கள். கம்யூனிஸ்ட் என்ற நல்அடையாளத்தோடு அரசியல் களம் வந்தீர். ஆனால், மதுரை மக்களுக்கான எந்த ஒரு முன்னெடுப்பும் முனையாமல் …, தங்களை மட்டுமே வளர்த்து கொண்டீர்கள்!’’

‘‘5 ஆண்டுகளாக ரோட்டில் செல்லவேண்டிய நாங்கள் , மலை முகட்டிலும் – அதல பாதாளங்களில்தான் பயணித்தோம் . அடிப்படை கட்டமைப்பு முன்னேற்றங்கள் எதுவுமே வரவுமில்லை – அது குறித்து நீங்கள் பேசவுமில்லை , குப்பைக் கூளமாக மதுரையை மாற்றிய விடியா திமுக அரசை தட்டி கேட்க திராணியில்லாமல், திமுகவைப் போலவே அடுத்தவர்கள் செயலுக்கெல்லாம் ஸ்டிக்கர் ஓட்டுகிறீர்!’’’

‘‘மாநில விடியா அரசை எதிர்த்து ஒரு நாளும் வாய் திறக்காத நீங்கள், திமுகவினரை விட மோசமான உ.பி.யாகவே மாறிவிட்டீர்! உங்களால் மதுரை பெற்றிருக்க வேண்டியது பல. ஆனால் இன்றைக்கு இழந்ததே அதிகம். மதுரை உங்களை மன்னிக்காது …!’’ இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி.யை கிண்டல் செய்து அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மக்களவைத் தொகுதியில் ராஜ் சத்யனும், சு.வெங்கடேசனும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் எதிர்த்து களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal