‘மதுரை தொகுதி MP-யை காணவில்லை’ என ஒட்டப்பட்ட போஸ்டருடன் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தமிழ்நாட்டில் பல்வறு தொகுதிகளிளும் எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஒட்டப்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மற்றும் கரூர் தொகுதிகளிலும் இதே மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்நிலையில் நேற்று மதுரை முழுவதும் மதுரை தொகுதி MP-யை காணவில்லை, கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டரை மர்ம நபர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர் பக்கத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தவிர, நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் எம்.பி. பதுங்கு குழியிலிருந்து ‘லைம் லைட்’க்கு வந்திருப்பதாக அவரது கட்சிக்கார்களே கிசுகிசுக்கிறார்கள்!