அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பல்வேறு புகார்கள் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று அளித்த மனு மீது விசாரணை நடத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில்: ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு 2017ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பல்வேறு புகார்கள் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை’’ எனவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தற்போதைய மனுவில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்ற கோரிக்கையுடன் அளித்த தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் விசாரணையை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தமிழக அரசியலிலும், அதிமுகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal