தூத்துக்குடியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:“கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது. மத்திய அரசின் பங்களிப்பால் கடல்வழி, நீர்வழி போக்குவரத்தில தலைசிறந்து விளங்குகிறோம். உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் 8 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பங்களிப்பால் கடலோர மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

வரும் காலத்தில் தமிழ்நாடு மிக வேகமாக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. 3வது முறை மத்தியில் ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்கும்போது இந்த பணிகள் தொடரும். தமிழ்நாட்டு மக்களுக்கு இது மோடியின் உத்தரவாதம். தமிழகத்தின் பல பகுதிகளுக்கு நான் சென்று வந்தேன். தமிழர்களின் அன்பை பார்த்தேன். இதை நான் வீணடிக்க மாட்டேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிச்சயம் பாடுபடுவேன். இன்று இந்த நேரம் வளர்ச்சியின் நேரமாகும்”என்று கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal