கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், ‘நான் அ.தி.மு.க.வில் ராஜாவாக உள்ளேன். பா.ஜ.க.வுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது. அ.தி.மு.க.வில் உள்ள எந்தவொரு அடிப்படை தொண்டனும் பா.ஜ.க.வில் இணைய மாட்டான். நாங்களும் சொல்வோம். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள்’ என்று பேசியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பிய போது, “அப்படியா? நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. யார் உங்களுக்கு சொன்னது. வந்தால் சந்தோஷம்தான். வந்தால் சொல்லி அனுப்புகிறேன் என்று பதில் அளித்தார். அதிமுக எம்.எல்.ஏ சொன்ன கருத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கே தெரியவில்லை என்று சொன்னது பேசு பொருளாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal