மதுரையில் பலநூறு கோடியில் கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் திறக்கப்பட்டு 6 மாதத்தில் விரிசல் விழுந்துவிட்டதாக அ.தி.மு.க. மருத்துவரணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் பகீரங்க குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூயதாவது, ‘‘32 மாத விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மை இல்லை ஏற்கனவே எடப்பாடியார் செய்திட்ட பணிகளைத்தான் ஸ்டாலின் ரிப்பன் விட்டு திறந்து அதற்கு தனது தந்தையார் பெயரை சுட்டி அதை விளம்பரத்துக் கொள்கிறார். குறிப்பாக மதுரை மாவட்டத்திற்கு மக்களுக்கான எந்தத் திட்டங்களும் செய்யவில்லை, மக்கள் விரும்பாத வகையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரையில் 116 கோடியில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என்று முதலில் ஸ்டாலின் அறிவித்தார்.அதனை தொடர்ந்து படிப்படியாக உயர்த்தி 215 கோடியில் நூலகத்தை கட்டி அதை கடந்த 15.7.2023 அன்று ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆனால் ஸ்டாலின் திறந்து 6 மாதத்திலே நூலகத்தின் பல்வேறு இடங்களில் சுவர்கள் பெயர்ந்து விழுகிறது. குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு மதுரையில் மழை பெய்தது அதில் கொடை போன்று அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீர் ஒழுங்கியது,இதனை தொடர்ந்து மேல் கூரையிலே தற்காலிகமாக ஷீட் அமைத்துள்ளனர். அதேபோல் நூலகத்தில் உள்ளே பொருத்திய மின்சார விளக்குகளில் மழை நீர் ஒழுகி உள்ளது. நூலக அறைகளில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து உள்ளது. இதனால் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்ததா? அலலது விரிசலா என்று மக்கள் அச்சுத்துடன் உள்ளனர். புத்தக ரேக்குகள் எல்லாம் துருப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது.  புரட்சித்தமிழர் எடப்பாடியார் இந்த  32 மாத விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மை இல்லை கரப்ஷன், கமிஷன், கலெக்சன் தான் உள்ளது என்று அடிக்கடி கூறியவரும் குற்றச்சாட்டு இன்றைக்கு நிரூபணம் ஆகி உள்ளது.

அதே போல் எடப்பாடியார் 2019 ஆம் ஆண்டு சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் 397 கோடி மதிப்பில் கிளாம்பாக்கத்தில் ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து நிலையத்தை உருவாக்க அடிக்கல் நாட்டினார்.அதனைத் தொடர்ந்து கொரோனா காலம் ஏற்பட்டதால் பணி தாமதம் ஆனது அதன் பின பணி தொடங்கப்பட்டது

பொதுவாக எடப்பாடியார் ஒரு திட்டங்களை செய்தால் அது முழுமையடைந்த பின்பு தான் திறப்பு விழா நடத்துவார்.கடந்த எடப்பாடியார் ஆட்சியில் 90 சதவீதம் பணிகள் முடிந்தால் கூட திறக்க மாட்டார்.100 சதவீதம் முடிந்தால் தான் திறப்பு விழா காண்பார் அந்த சூழ்நிலையில் தான் விடியா திமுக ஆட்சிக்கு வந்து பத்து சதவீத பணிகளை முடித்துவிட்டு அதற்கு கருணாநிதி பேரை ஸ்டாலின் சாட்டுகிறார்.

குறிப்பாக கடந்த அம்மாவின் ஆட்சி காலத்தில் 15 ஆயிரம் பேருந்துகள் வழங்கப்பட்டன.இதன் மூலம் மக்களுக்கு போக்குவரத்து வசதி சிரமம் இல்லாமல் இருந்தது தற்போது திமுக ஆட்சி வந்த பின்பு ஜெர்மன் நாட்டின் ஒப்புதல் ஐயாயிரம் பேருந்துகள் வாங்கப்படும் என்று கூறினார்கள் இதுவரை வாங்கப்படவில்லை.கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமை அடையவில்லை மக்களின் அடிப்படை வசதி கூட அங்கு நிறைவேற்றப்படவில்லை. அவசர கோலத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு அதற்கு கருணாநிதி பெயரை சூட்டி உள்ளார்கள்

கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு வர 40 கிலோமீட்டர் தூரம் ஆகும் ஆனால் சரிவர போக்குவரத்து  வசதி இல்லாததால் மதுரையில் இருந்து சென்னைக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமோ அதே அளவில் வாடகை காரர்களுக்கு மக்கள் கொடுக்கும் நிலையில் உள்ளது .ஒரு பேருந்து நிலையத்தில் சராசரியாக ஆயிரம் பேர்கள் வருவார்கள் என்றால் அங்கு 10 கழிப்பிட வசதி இருக்க வேண்டும் ஆனால் அங்கு போதுமானதாக இல்லை.

தென் மாவட்டங்களில் இருந்து தினசரிசென்னைக்கு 14 ரயில் இயக்கப்படுகிறது இந்த அனைத்து ரயில்களிலும் இடம் கிடைக்காத மக்கள் பேருந்தை தான் மக்கள் நாடுகிறார்கள் குறிப்பாக தென் மாவட்டத்திலிருந்து நாள்தோறும் ஐம்பதாயிரம் பேர் வரை சென்னைக்கு வந்து செல்கிறார்கள். இன்னைக்கு தென் மாவட்டங்களில் இருந்து வருகை தரும் அடித்தட்டு மக்கள் தங்கள் பணிக்காக ஒரு நாள் வரும் பொழுது பேருந்து நிலையத்தில் உள்ள குளியலறை, கழிப்பறை பயன்படுத்தி கொள்வார்கள் தற்பொழுது கிளாம்பாக்கத்தில் மாறிவிட்டதால் அங்கு இது போன்ற வசதி இல்லாததால் மக்கள் கடுமையாக அமைந்து வருகிறார்கள்.

ஏற்கனவே கிளாம்பாக்கத்தில் 20 கோடியில் ரயில்வே நிலைய அமைக்க திட்டமிடப்பட்டது இது முன்கூட்டியே செய்திருந்து பேருந்து நிலையத்தை திறந்து இருக்க வேண்டும். தற்போது உள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் 66 ஏக்கர் உள்ளது இதன் சந்தை மதிப்பு ஏறத்தாழ 15,000 கோடி ஆகும்

ஆனால் இந்த பேருந்து நிலையத்தை துபாய் நிறுவனத்தைச் சேர்ந்த லூலு நிறுவனம் மால் போன்ற அமைப்பை உருவாக்க தாரை பார்க்க மறைமுக முயற்சி நடைபெறுகிறது ஏனென்றால், இந்த நிறுவனத்தில் தான் கருணாநிதி குடும்பங்கள் தங்களின் பணத்தைகளை கொடுத்துள்ளனர் அதன் மூலமாக தங்கள் பணத்தை தமிழகத்தில் கொண்டுவர இதன் மூலம் திட்டம் தீட்டி வருவதாக பல்வேறு சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்’’  கூறினார் என கூறினார்.

‘ஆபரேஷன் சக்ஸஸ்! பேஷன்ட் ‘டெட்’!’ என்பதைப் போல மதுரையில் பலநூறுகோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூலகத்தின் நிலைமை இருக்கிறது என டாக்டர் சரவணன் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal