இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியிருப்பதாவது:- கடந்த டிசம்பரில் குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஜனவரி 3ம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவை புதுப்பிக்க வேண்டும். இலங்கை வசம் தற்போது உள்ள 77 மீனவர்கள்  மற்றும் 151 படகுகளை உடனடியாக விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal