திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆரை இழிவாக பேசியதாக தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: எதிரியையும் வாழ வைத்தவர் எம்.ஜி.ஆர். நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாக பேசுவதை கைவிட வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமாக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டு குடிநீர் திட்டங்களை திட்டமிட்டு நிறைவேற்றியது அ.தி.மு.க. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே தி.மு.க. அரசு நிறைவேற்றுகிறது. தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal