திருவனந்தபுரம் அவனவன் சேரி பகுதியைச் சேர்ந்தவர் தாரா மித்ரா நிரஞ்சனா (வயது 41). இவர் நேற்று காலை நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகர் பகுதியில் உள்ள வீட்டின் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட தாரா மித்ரா நிரஞ்சனா வடசேரி போலீசில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டேன்.

இந்த நிலையில் நாகர்கோவில் பார்வதிபுரம் சாரதா நகரைச் சேர்ந்த வாலிபருக்கும், எனக்கும் நண்பர் ஒருவர் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியது. பின்னர் அவர் என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். என்னை திருமணம் செய்வதாகவும் கூறினார். அவரை நம்பி நான் பலமுறை அவர் அழைத்த இடங்களுக்கு சென்றேன். நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், சென்னை உட்பட பல்வேறு ஓட்டல்களில் வைத்து ஆசை வார்த்தை கூறி என்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்தார்.

இந்த நிலையில் அவர் தொழில் தொடங்க உள்ளதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறினார். உடனே நான் என்னிடம் இருந்து 25 சவரன் நகை, 3 லட்சம் பணத்தை கொடுத்தேன். பணம் கொடுத்த பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் கூறினேன். அவரும் விரைவில் திருமணம் செய்வதாக கூறி என்னை அதன் பிறகும் திருவனந்தபுரம், சென்னை என பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்தார்.

இருவரும் உல்லாசமாக இருப்பதை வீடியோவில் பதிவு செய்து தனது லேப்டாப்பில் வைத்துள்ளார். தற்பொழுது நான் அவரை தொடர்பு கொண்டால் அவர் என்னிடம் சரியாக பேசுவதில்லை. திருமணம் செய்து கொள்ளவும் மறுப்பு தெரிவிக்கிறார். என்னுடைய ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி வருகிறார். எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் அவர் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இது தொடர்பாக வடசேர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal