கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்க்ளைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது  மாவட்ட செயலாளர்கள் சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்தனர். பெரும்பாலானோர் தனித்துப் போட்டியிடுவோம் என கருத்து பகிர்ந்தனர்.  இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. இனிமேல் கூட்டணி அமைத்துப் பேசுவோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். விஜய பிரபாகரனை ஒரு தொகுதியில் நிற்கவைக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal