சென்னை கோயம்போடு காய்கறி சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், சமீபகாலமாக சற்று விலை உயர்ந்தது. இந்நிலையில் பூண்டின் விலை தற்போது 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உத்தரபிரதேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டு, நடப்பாண்டில் விளைச்சல் குறைந்துள்ளது. விளைச்சல் மற்றும் வரத்து குறைவு எதிரொலியாக பூண்டின் விலை உயர்ந்துள்ளது. 70 சதவீதம் வரை பூண்டு வரத்து குறைந்திருப்பதாகவும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு விலை ஏற்றம் இருக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.