கடந்த மாதம் உடல்நலக் குறைவால் மரணமடைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளும், கனிமொழி எம்.பி.யும் நேரில் சந்தித்து பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் கூறினர்!
தமிழகத்தில் கடந்த 50 வருட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திமுக- அதிமுகவிற்கு மாற்றாக நடிகர் விஜயகாந்த்த கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கினார். இதனை தொடர்ந்து 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒற்றை ஆளாக சட்டமன்றத்திற்கு நுழைந்தார்.
அடுத்த 5 வருடங்களில் தேமுதிகவை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இதனால் திமுகவை பின் தள்ளிவிட்டு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் என்ற பொறுப்பை விஜயகாந்த் பெற்றார். அப்போது அதிமுக ஏற்பட்ட மோதல் காரணமாக தேமுதிக நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக கட்சியில் இருந்து விலகி அதிமுவில் இணைந்தனர்.
இதனையடுத்து 2016ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியோடு இணைந்து போட்டியிட்ட தேமுதிக அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது. அடுத்த சில மாதங்களிலையே விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கட்சி நிகழ்வுகளில் பிரேமலதா மட்டுமே முன்னிறுத்தப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த மாதம் மூச்சு விட சிரம்ப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு நிம்மோனியா காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். அவரது மறைவையடுத்து தமிழகம் முழுவதும் இருந்து லட்டசக்கணக்கான தொண்டர்கள் சென்னைக்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதையும் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளும்ன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் சென்றனர். அப்போது விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.