தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து ராஜ்காட்டில் சர்வ தர்ம பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal