‘தி.மு.க.விற்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்’ என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கர்நாடகமாநிலம் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

பிப்ரவரி மாத இறுதியில் தமாகா செயற்குழு கூடி, தேர்தல் கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கும். இண்டியா கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாகத் திகழ்கிறது.

பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அனுபவம் மிக்க மூத்த தலைவர். அந்த மாநில மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், தற்போது ராஜினாமா செய்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் எந்த தடையும் இல்லை. திமுக இளைஞரணி மாநாடு, பணபலம், விளம்பரத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் திமுகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். இது மக்களவைத் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். இவ்வாறு வாசன் கூறினார். மாநிலப் பொதுச் செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal