சென்னையில் கடந்த 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று இரவு புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு செல்கிறார். அங்கிருந்து ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், அரசு பிரதிநிகளை சந்திக்கிறார். 10 நாட்கள் பயணத்தை முடித்துவிட்டு அடுத்த மாதம் 7-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal