‘சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாடு உரிமைகளை மீட்க நடக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகத்தின் உரிமைகள் பறிபோயிருக்கிறது’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் பகீர் குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார்.
அ.தி.மு.க. மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா.சரவணன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
‘‘மதுரையில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் 50 லட்சம் பேர் திரண்டு வந்தனர். ஆனால் திமுக அரசின் உத்தரவுபடி காவல்துறை மாநாடுக்கு வாகனங்களை உள்ளே நுழைவிடாமல் 50 கிலோ மீட்டர் அளவில் திருப்பிடப்பட்டனர். அதையும் மீறி மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர்.
புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக திமுக இளைஞர் அணி மாநாடு சேலத்தில் நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.இரண்டு முறை தள்ளிப்போனது அதனை தொடர்ந்து மூன்றாம் முறையாக நடத்தினார்கள். சென்னை உட்பட தென் மாவட்டங்களில் கன மழை ஏற்பட்ட பொழுது அப்போது அமைச்சர்கள் சிலர் தான் இருந்தனர் .ஆனால் தற்போது சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் கடந்த ஒரு மாதமாக இருந்தனர் இதனால் ஒட்டுமொத்த தலைமை செயலகம் காலியாகி உள்ளது போல அமைச்சர்கள் எல்லாம் அங்கே தான் இருந்தனர்.
திமுக மூத்த அமைச்சர் நேரு இளைஞர் அணி மாநாடு உலக சாதனை படைக்கும் என பேசினார். நடைபெற்ற மாநாடு உலக சாதனை இல்லை. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி உலக வேதனையாக ஆட்சியாக உள்ளது.திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் நடைபெற்ற போது சாலையில் போக்குவரத்து நெரிசலில் ஏற்படுத்தினர் இதனால் மக்கள் கடுமையாக வேதனை அடைந்தனர்.
மக்களை ஏமாற்றி கொள்ளையடித்த 30,000 கோடியில், உதயநிதிக்கு மணிமகுடம் சூட்ட 200 கோடி வாரி இறைத்தனர். ஒரு நபருக்கு 500 ரூபாய் வீதம் கொண்டு வந்து ஆட்களை இறக்கினர்.ஆனால் அவர்கள் மாநாட்டுக்கு வராமல் நேராக டாஸ்மாக்கில் அலைமோதி சென்றனர். அதேபோல் திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு திமுகவின் சாதனை செல்லும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெறும் என்று சொன்னார். ஆனால் அரைகுறை ஆடையுடன் பெண்கள் நடனம் ஆடியதை பொதுமக்களை முகம் சுளித்தனர் இதுதான் இளைஞர்களுக்கு திமுக சொல்லும் கருத்தா?
இளைஞர் அணி மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சியில் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை மேடையில் அமர வைத்து குடும்ப விழாக்கள் போல் நடத்தினார்கள்.பின் வரிசையில் தனது பேரனை அமர வைத்த ஸ்டாலின் கட்சியின் மொத்த நிர்வாகிகள் நின்று கொண்டே இருந்தனர்.திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்றதாக கூறியுள்ளார்கள் ஆனால் ஸ்டாலின் பேசும் பொழுது 80% காலிச்சேர்கள் தான் காட்சியளித்தது
அதிமுக மாநாட்டில் தொண்டர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன மீதம் இருந்த உணவுகளை பெரிதுபடுத்தினர். ஆனால் திமுக மாநாட்டில் சிக்கன் பிரியாணி என்று கூறிவிட்டு அதில் சிக்கன் இல்லை என்ற காரணத்தால் திமுக தொண்டர்கள் அப்படியே பிரியாணியை வீசிவிட்டு சென்றனர். திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கையெழத்து இடப்பட்டது.இந்த நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் எடப்பாடியார் 7.5 இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்.இதன் மூலம் ஆண்டுக்கு 606 அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பு பெற்று வருகிறார்கள்.இதற்கு முன்பு வெறும் ஆறு மாணவர்களுக்கு தான் மருத்துவ இடங்கள் கிடைத்தது. மேலும் 11 மருத்துவ கல்லூரியை உருவாக்கியதின் மூலம் 1650 மருத்துவ இடங்களை தமிழகத்திற்கு எடப்பாடியார் கூடுதலாக பெற்றுத் தந்தார்
நீட் தேர்வை ஒழிக்க 80 லட்சம் பெற்றோம் கையெழுத்து வாங்கி அதை ஜனாதிபதிக்கு அனுப்பவும் என்று கூறினார்கள் ஆனால் அந்த மாநாட்டில் கையெழுத்து வாங்கிய கடிதங்கள் எல்லாம் குப்பையில் கிடந்தன. ஆனால் தீர்மானத்தில் நீட் தேர்வில் இறுதிவரை வெற்றியை எட்டு வகையில் உறுதியாக இருப்போம் என்று கூறுகிறார்கள் ஆனால் அதன் கையெழுத்தை மாநாட்டு குப்பையில் தூக்கி எரிந்துள்ளனர் மக்கள் உங்களை தூக்கி ஏறிவார்கள்.
உதயநிதி பேசிக் கொண்டிருக்கும் பொழுது திமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் ஜாலியாக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள் இந்த மாநாட்டின் மூலம் உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிக்க ஸ்டாலினும் முயற்சி எடுத்தார் ஆனால் எடப்பாடியார் இதை மக்களுக்கு தோலுரித்து காட்டியதால், தற்போது துணை முதல்வர் அறிவிக்கப்படவில்லை
தமிழக உரிமை மீட்கும் மாநாடு என்று கூறினார்கள் ஆனால் திமுக ஆட்சியில் தான் கட்சத் தீவு, காவிரி, முல்லைப் பெரியார் என நமது உரிமைகள் பறிபோனது ஆனால் நமது உரிமையை தட்டிப் பறித்த கர்நாடகா, கேரளாவை கண்டித்து தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை’’ என கூறினார்.