நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மாநிலங்களில் பா.ஜ.க. வளர்ச்சி பெற ஆரம்பித்தது. தமிழகத்தின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திலும் பா.ஜ.க. வளர்ச்சி அடைந்து வருகிறது.

கே.பிரகாஷ்

தமிழகத்தைப் பொறுத்தளவில் நகர்ப்புறங்களைத் தவிர்த்து கிராமப்புறங்களில் பா.ஜ.க. என்ற ஒரு கட்சி இருப்பதே தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் கிராமப்புரங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களை இளைஞர்கள் எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாச்சலபுரத்தில், உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் கே.பிரகாஷ், வீடுவீடாக சென்று பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி வருகிறார்.

நேற்று அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு செல்ல முடியாதவர்கள், இங்குள்ள ஆலயங்களில் வழிபாடுகள் செய்தனர். இந்த நிலையில்தான், உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் கே.பிரகாஷ் தலைமையில் பி.ஜே.பி. நிர்வாகிகள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

பின்னர், வெங்கடாசலபுரத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஐநூறுக்கு மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் துறையூர் சட்டமன்ற பொறுப்பாளளும், மாவட்ட பொறுப்பாளருமான பி.செந்தில் குமார் எம்.பி.ஏ., உள்பட பி.ஜே.பி. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதே போல் மற்ற கிராமப்புறங்களிலும் கோவில்களில் வழிபாடு, அன்னதானம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

குறிப்பாக தமிழகத்தில் கிராமப்புறங்களிலும் மெல்ல மெல்ல தாமரை மலர்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal