காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14ம் தேதி மணிப்பூரில் உள்ள தவுபாலில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கினார். யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய பாஜவினர் கோஷம் எழுப்பினர். எதிர்ப்பு கோஷம் எழுப்பியர்களை நோக்கி ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்தார். மேலும் ராகுலின் யாத்திரையை வரவேற்கும் போஸ்டர்கள், பேனர்களை மர்மநபர்கள் கிழித்து சேதப்படுத்தினர். அதில் பங்கேற்றவர்கள் வந்த வாகனங்களை அடித்து உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை  குறித்து  தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அசாமில் ராகுலின் யாத்திரையில் பாஜகவினரின் இழிவான தாக்குதல் வெட்கக் கேடானது என்றும் மக்களின் உரிமைகளை கடந்த 10 ஆண்டுகளாக காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது பாஜக. பாஜகவினரின் மிரட்டல்களுக்கு எல்லாம் பயந்த இயக்கம் காங்கிரஸ் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal