3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் ‘கேலோ இந்தியா’ போட்டியை தொடங்கி வைத்தார். நேற்று இரவு கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடி இன்று திருச்சி செல்வதற்காக சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையம் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பிரதமர் மோடி திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார்.
திருச்சி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வரவேற்றார். இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டரில் பயணித்து பஞ்சகரை சாலையை அடைகிறார். 10.50 மணிக்கு சாலை மார்க்கமாக செல்லும் பிரதமர் மோடி 11.00 – 12.30 வரை சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.