பாரம்பரியமிக்க பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெகு விமர்சையாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற 14-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற உள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும் தமிழகத்தில் இருந்து முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நடத்திய விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.