தமிழகத்தைப் பொறுத்தளவில் வடகிழக்குப் பருவமழை பருவம் மாறி அதிகளவில் கொட்டித் தீர்த்ததால் கடந்த மாதம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டது.
அதன் பிறகு தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால், உயர்ச்சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் பருவம் மாறி பெய்து வரும் பருவமழை பற்றி முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில்,
‘‘மாமழையே
பருவ நிலை மாற்றம்
புவியின் அதிவெப்பம்
மூம்மாரி பெய்யும் மழை குழம்பிற்று
கள்ளமில்லா மழலையின் சிரிப்பே மழையின் நாதகானம்
இன்றோ கலக்கமே நீ பொழியும் போது
மழையே, விவசாயம் உரிய காலங்களில் விளைந்திட
கற்றபவர்கள் காலவரையுற்குள் கற்றிட
உழைப்போர் உரிய நேரத்தில் ஊதியம் பெற்றிட
நலிவுற்றோர் தடையின்றி மருத்துவம் கிடைத்திட
இல்லம் உள்ளோர் இல்லாமல் தடுத்திட
இல்லமற்றவர் நடைப்பாதையில் உறங்கிட
இயல்பான வாழ்க்கை சவால்களுடன் நிறைவாக வாழ்ந்திட
மாதம் மூம்மாரி மட்டும் பொழிந்திடுக
மண்ணும் மனங்களை கவர்ந்த
தவித்த வாய்க்கு தாகம் தீர்த்திடும்
கருணை மழையே!
அளவிற்கு மீறினால் அமுதம் மட்டும் நஞ்சல்ல
புரிந்திடுக ஈர மன மழையே…!’’ என பதிவிட்டிருக்கிறார்.
பருவநிலை மாற்றத்தாம், புவியின் அதிக வெப்பமயமாதலால் தட்பவெப்பநிலை மாறி மனிதர்களையும், விலங்குகளையும் படாத பாடு படுத்தும் பருவம் மாறி பெய்யும் பருவமழை பற்றி மிக அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா..!