தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கடந்த 5-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. இருந்தாலும் முக்கிய பிரமுகர்கள் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் நடிகர் விஜய் கனிமொழி எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது இருவரும் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர். விஜய் போனில் பேசியது குறித்து கனிமொழி எம்.பி. கூறுகையில், எப்போதும் போல் அவர் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அவ்வளவு தான். மற்றபடி வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. குறிப்பாக அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. தூத்துக்குடியில் மழை வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருவதால் வேறு பணிகளில் இன்னும் கவனம் செலுத்தவில்லை என்றார். வெள்ள நிவாரண பணிகளுக்கு கூடுதல் நிதி கேட்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்திக்கும் தேதி முடிவாகி விட்டதா? என்ற கேள்விக்கு அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal