உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22-ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படவுள்ளது. இதில் கோவிலின் கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க ஆளும் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கும், பல திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அயோத்தி ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜனவரி 22-ம் தேதி அயோத்தி கும்பாபிஷேக
நிகழ்வுக்கு வரவேண்டி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. விழா குழு நிர்வாகிகள் பிரகாஷ், ராமராஜசேகர், ராம்குமார் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal