பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி வந்தார். திருச்சி வந்த அவர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர், திருச்சி விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார். அதன்பின் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமர் மோடி, விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அப்போது பிரதமர் மோடி கூறும்போது “கடந்த வாரம் நாம் விஜயகாந்தை இழந்துள்ளோம். உலக சினிமாவில் மட்டும் அவர் கேப்டன் அல்ல. அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தார். சினிமா மூலம் மக்களின் இதங்களை வென்றார். அரசியல்வாதியாக எல்லாவற்றையும் விட தேசிய நலனில் அக்கறை கொண்டிருந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal