திருச்சி விமான நிலையத்தில் ரூ.1112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில், காரைக்குடி- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை நடைபாதையுடன் கூடிய 2 வழிப்பாதை, எண்ணூர், திருவள்ளூர், நாகை, மதுரை, தூத்துக்குடி, இயற்கை எரிவாயு குழாய் திட்டம் உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு  திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுதொடர்பான காணொலியும் திரையிடப்பட்டது.   இதன்பின்னர் வணக்கம் என தமிழில் சொல்லி உரையை பிரதமர் மோடி தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள். 2024-ல் நான் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி தமிழகத்தில் தான். ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். ரூ.20 ஆயிரம் கோடி திட்டங்கள், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும். கடந்த மாதம் வெள்ள பாதிப்பால் தமிழக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வெள்ள பாதிப்பில் இருந்து மீள தமிழக மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும். மிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான். அனைத்தையும்  விட தேசத்தை அதிகம் நேசித்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal