திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்பது பற்றி திருச்சியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு மேடையிலேயே மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுத்திருப்பதுதான் தி.மு.க.வினரை மகிழ்ச்சியிலும், பா.ஜ.க.வினரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்;- ‘‘திராவிட மாடல் ஆற்றில் தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சியின் போது கல்விக்கு வகுத்த வலிகள் தான் இன்று உயர்கல்வி துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அவற்றை சிறிதும் மாற்றாமல் திராவிட மடல் ஆட்சி அனைவருக்கும் கல்வி என்று சமூகப் புரட்சியை ஏற்படுத்தி அனைவரும் கல்வி பயில வேண்டும் என்று நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக எனது கனவு திட்டமான நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்துவதற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மூலம் மாணவர்கள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள்.

29 லட்சம் மாணவ மாணவிகள், 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. 7.5 இட ஒதுக்கீடு மூலம் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விகள் வழங்கப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 1.40 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

இந்திய அளவில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது. மாணவ மாணவிகள் நன்றாக படித்து நம் நாட்டின் எதிர்காலத்தில் தொழில் முனைவராகவும், சமுதாயத்திற்கும் பெற்றோர்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும். குறிப்பாக சிறந்த மனிதர்களாக உயர வேண்டும். கல்வியை கற்பித்த ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழகளுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்

தமிழ்நாட்டில் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கல்லூரி கல்வி ஆராய்ச்சி கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே திராவிட மாடல் ஆட்சியாகும். மாணவ மாணவிகள் உயர்கல்வியில் மட்டுமல்ல இந்த சமுதாயத்திலும் சிறந்து உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அதே சமயம் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன்’’ முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal