தமிழகத்தில் பா.ஜ.க. போடும் அரசியல் கணக்குகளை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கிறார், ஓ-.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்.
‘நரியின் கையில் அப்பம்…’ என்ற தலைப்பில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. போடும் அரசியல் கணக்குகளை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். இதில், அ.தி.மு.க.வின் எதிர்காலமே சூனியமாகும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எடப்பாடியை மட்டும் நம்பி களத்துக்கு போனால் ஒன்றும் தேறப் போவதில்லை..மாறாக..
ஓ.பி.எஸ் சசிகலா இவர்களிடம் கட்சி போனால் அது தங்களின் எதிர்கால கனவுக்கு ஆபத்தாகி விடும்…
ஆக அண்ணா தி.மு.க வாக்குகள் தங்களுக்கு பயன்பட வேண்டும்…
அதேவேளை ஓன்றுபட்ட கட்சியாக அது மீண்டும் உருவாகி விட கூடாது என்னும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் பா.ஜ.க
பேசாம தி.மு.க வுக்கே வெற்றி வாய்ப்பை முழுமையாக தந்து விட்டு தேர்தலுக்கு பிறகு வழக்குகளை காட்டி தி.மு.க வையே வளைத்துக் கொள்ளலாமா என்றும் கணக்குப் போடுகிறது…
ஆக, மொத்தத்தில் நரியின் கையில் அப்பம் என்பதே நடப்பு அரசியலின் நிலை…’’ என பதிவிட்டிருக்கிறார்.
அரசியல் களத்தில் இந்தப் பதிவை அவ்வளவு எளிதில் யாரும் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதே யதார்த்த நிலை…