தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (டிச.25) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் புதன்கிழமை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்  என சென்னை வானிலை ஆய்வு மையம், அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal