சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறையும், அவருக்கும் அவருடைய மனைவிக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தான் வகித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதிவியையும் பொன்முடி இழந்துள்ளார்.

இந்த தீர்ப்பு விவரங்கள் நேற்று வந்தது. இந்நிலையில் தண்டனை தீர்ப்பிற்கு பிறகு முதலமைச்சர் முக ஸ்டாலினை அவருடைய இல்லத்திற்கே சென்று நேற்று சந்தித்து பேசியுள்ளார் பொன்முடி. சுமார் 15 நிமிடம் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

அப்போது, தீர்ப்பின் விபரம், தண்டனை விபரம் குறித்து முதல்வரிடம் விளக்கியிருக்கிறார் பொன்முடி. ‘உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால், நமக்கு சாதமாக தீர்ப்பு வரும்’ என பொன்முடியிடம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். மேலும், ‘இந்த வழக்குகள் முடியும் வரை தி.மு.க.வின் சீனியர் வழக்கறிஞர்கள் உதவியாக இருப்பார்கள்’ என்ற உறுதியையும் பொன்முடிக்கு கொடுத்திருக்கிறார் முதல்வர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal