‘நீட் விலக்கு தி.மு.க.வின் தோல்வி’ என அ.தி.மு.க.வின் மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் சாட்டையை சுழற்றியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன், ‘‘பெருமழையால் சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு தொற்று நோய் பரவல் காரணமாக மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். எடப்பாடியார் முதன் முதலாக மருத்துவ முகாமை நடத்த வேண்டும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து 500 குடும்பங்களுக்கு ஒரு மருத்துவமுகாமினை நடத்த வேண்டும்.

 ஆனால் துறையின் அமைச்சர் மா.சு கண்துடைப்புக்காக மருத்துவ முகாமினை நடத்திவிட்டு, அதை சாதனையாக பேட்டி கொடுத்து வருகிறார். அது மட்டுமல்ல  திமுக அவலங்களை எடப்பாடியார் தோலுரித்துக் காட்டினால் அதை மறப்பதற்காக அநாகரிமாக பேசி வருகிறார் மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை. இனிமேல் தொடர்ந்து எடப்பாடியாரை மா.சு விமர்சித்தால் நாங்கள் சும்மா விடமாட்டோம் நாங்களும் தொடர்ந்து பதிலடி கொடுப்போம்.

 ஆனால் இன்றைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு புரட்சித்தமிழர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, தொடர்ந்து மருத்துவ முகாம்கள் கழகத்தின் சார்பில் பெற்று வருகிறது இங்கு வரும் மக்கள் எல்லாம் எங்கள் பகுதியில் மருத்துவ முகாமை அரசு நடத்தவில்லை என்று அரசை  குற்றம் சாட்டி எடப்பாடியாருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

அரசு மருத்துவமனையில் போதுமான மருந்துகள் உள்ளது என்று அமைச்சர் மாசு கூறுகிறார் ஆனால் பல்வேறு மருத்துவமனையில் வரும் தகவல் படி உயிர் காக்கும் மருத்துவங்கள், நோய் தடுப்பு மருந்துகள் எல்லாம் தட்டுப்பாடு உள்ளதாக கூறுகிறார்கள். மருத்துவத் துறையில் சகாப்தம் படைத்தவர் எடப்பாடியார் அதற்கு பல்வேறு உதாரணங்களை சொல்லலாம்.

2020 ஆம் ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் 7.5 சகவீத ஒதுக்கீட்டை எடப்பாடியார் கொண்டு வந்தார்.இதன் மூலம் 2020 ஆம் ஆண்டு 433 மாணவர்கள், 2021 ஆம் ஆண்டு 544 மாணவர்கள் ,2022 ஆம் ஆண்டு 565 மாணவர்கள், 2023 ஆம் ஆண்டு 622 மாணவர் என இதுவரை 2,164 அரசு பள்ளி மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்

2020 ஆண்டுக்கு முன் அரசு பள்ளியில் 41சகவீதம் மாணவர்கள் படித்து வந்தாலும், வெறும் 6 பேருக்கு மட்டும் தான் மருத்துவ இடம் கிடைத்தது. ஒரே ஆண்டில் திருவள்ளுவர், அரியலூர், கள்ளக்குறிச்சி,திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியை எடப்பாடியார்  கொண்டு வந்தார்.இதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 1,450 மருத்துவ இடங்கள் கிடைத்தது.

ஆனால் திமுக இதுவரை ஒரு மருத்துவ  கல்லூரியை கூட உருவாக்க முடியவில்லை. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி அரசு மருத்துவ கல்லூரி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டிஸ் அனுப்பியதால் மாணவர்கள் சேர்க்கையில் குழப்பம் ஏற்பட்டது.

தற்போது தமிழகத்தில் 1,752 மருத்துவ காலிப் பணியிடங்கள் உள்ளதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2000 அம்மா மினி கிளினிக்கை எடப்பாடியார் உருவாக்கினார் இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் 25 லட்சம் மக்கள் பயன்பெற்றனர் அதை திமுக அரசு மூடிவிட்டது.

செங்குன்றம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுற்று பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக பிளீச்சிங் பவுடர் தூவாமல், மைதா மாவை தூவி உள்ளனர் இதுதான் அரசின் லட்சணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் கூறினார்கள் ஆனால் ரத்து செய்யவில்லை. இதுவரை 13 பேர்கள் நீட் தேர்வுக்காக தற்கொலை செய்துள்ளார்கள் இந்த தற்கொலைக்கு திமுக தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நீட் தேர்வை 2010 ஆண்டில் அப்போது மத்தியில் அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், துணை அமைச்சராக இருந்த திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் ஆகியோர்தான் கொண்டு வந்தார்கள். நீட் தேர்வு தமிழகத்தில் வரவேண்டும் என்று வாதாடியவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆவார் 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் அந்த ரகசியம் தெரியும் என்று கூறியவர்கள் இப்போது கையெழுத்து வாங்குவது ரகசியம் என்ன? இதன் மூலம் தங்களது தோல்வியை ஒப்புக் கொள்வார்களா’’ என பேசினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal